ந மது பூமியில் கோடிக்கணக்கான மனிதர்கள், இலட்சக்கணக்கான பூச்சியினங்கள், தாவரங்கள், பல்லாயிரக்கணக்கான பறவையினங்கள். விலங்கிளங்கள் ஆகியவற்றுடன் இணைந்தே வாழ்கிறார்கள்.
ஒவ்வொரு வகை உயிரினத்தையும் ஆராய்ந்தறிந்து அதன் இயல்புகளையும், வாழ்க்கை முறையையும் மளிதகுலத்துக்குச் சொல்வதில் இயற்கை ஆர்வலர்கள் பெரிதும் அக்கறை கொண்டுள்ளனர்.
அவர்கள் இல்லையெனில் இப்பூமியின் இதர உயிரினங்களை தாம் அறிந்து கொள்வதும், புரித்து கொள்வதும் மிகக்கடிளம். சில உயிரினங்களுக்கு இயற்கை அரிதான உடற்திறனை வழங்கியிருக்கிறது. அவை வாழும் சூழலைப் பொறுத்து இந்தக் கூடுதல் திறனை அவை அமையப் பெற்றுள்ளன. அவ்வகையில் கொலம்பியாவின் மகதலீனா ஆற்றுப் பள்ளத்தாக்கில் வாழும் சிலந்திக் குரங்குகளைப் பற்றி இயற்கை ஆர்வலர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர்.
அங்கு வாழும் ஒரு குரங்கினம் "சிலந்திக் குரங்குகள்” (Spider Monkeys) என அழைக்கப்படுகிறது. காரணம் அவற்றின் அசைவும், நகர்யும் சிலந்தியை ஒத்திருக்கின்றன. மேலும் சிலந்திக் குரங்குகள் தங்களது வாலை ஐந்தாவது காலைப் போல பயன்படுத்துகின்றன. சொல்லப் போனால் நான்கு கால்களும், வாலும் கைகளைப் போலவே பயன்படுகின்றன. தென் அமெரிக்கக் காடுகளில் தப்பிப் பிழைத்திருக்கும் பழமையான விலங்கினங்களில் சிலந்திக் குரங்குகளும் ஒன்று. வளர்ந்த குரங்கின் எடை சுமார் 10 கிலோ இருக்கும் என்கின்றனர் விலங்கின ஆர்வலர்கள். மரக்கிளைகளைப் பற்றிக்கொள்ளும் வலிமையுடைய வால் மற்றும் அதன் நுனிப்பகுதி பற்றிக்கொள்ளத் தோதான சிறிய அட்டை போன்ற தோல் அமைப்புடன் இருக்கிறது. சிலந்திக் குரங்குகளின் குட்டிகள் பிறந்த இரண்டு வாரத்திலேயே அவற்றின் வாலைப் பயன்படுத்தத் துவங்கிவிடுகின்றன. விமானப் பயணத்தில் மனிதர்கள் பயன்படுத்தும் பாதுகாப்பான சீட்பெல்ட் போல தாயின் வாலில் தங்களது வாலை இறுகக் கட்டிக்கொண்டு நாயின் முதுகில் குட்டிகள் பயணிக்கின்றன. கிளைகள் விட்டு கிளைகள், மரங்கள் விட்டு மரங்கள் தாவிச் செல்லவும் ஏதொன்றையும் உறுதியாக பற்றிக்கொள்ளவும் விசேசமான இந்த வால் அமைப்பு பயன்படுகிறது. இது சிலந்திக் குரங்குகள் மட்டுமே பெற்றிருக்கும் அபூர்வமான உடலமைப்பு ஆகும்.
“சிலந்திக் குரங்குகளுடன் காடுகளின் ஊடாக ஊஞ்சலாடிச் செல்வோம்" (Swing through the Trees with Amazing Spider Monkevs) என்ற தலைப்பில் நேசனல் ஜியோகிராபிக் சேனல் இப்படியான வியப்பூட்டும் செய்திகளைக் கொண்ட ஆவணத் திரைப்படம் ஒன்றினை உருவாக்கியுள்ளனர். சக உயிரினங்களையும் புரிந்துகொண்டு இயற்கையையும் நேசித்து வாழப் பழகிக்கொண்டால் மனித இளம் ஆறாவது அறிவுபெற்ற உயிரினம் என நாம் உறுதியாக நம்பலாம்.
Comments
Post a Comment