நா சாவின் கியூரியாசிட்டி ரோவர் கருவி செவ்வாய் கிரகத்தில் அதன் மாஸ்ட் கேம் புகைப்பட கருவியினை பயன்படுத்தி கடந்த மாதம் ஜூன் 2 (3492வது செவ்வாய் தினம்) அன்று செவ்வாயில் இருண்ட கற்பாறைகள் கொண்ட சல்பேட் அதிகம் நிறைந்த மணற்பரப்பிலான பண்டைய நீரோடைகள் மற்றும் குளங்கள் இருந்ததற்காக அடையாளங்களைக் கொண்ட நம்பத்தகுந்த ஆறு புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.
இந்த படத்தில் மெல்லிய பாறைகளின் அடுக்குகள் வழியே நீர்ப்பரப்பு இருந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம் என்ற பார்வையை விஞ்ஞானிகளுக்கு ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் கடந்த மே 19, 2022-இல் எடுத்து அனுப்பிய புகைப்படத்தில் “லாஸ் கிளாரிடாஸ்" என்ற புனைப்பெயர் கொண்ட இடத்தில் அதீத காற்று வீசி ஏற்படுத்தியுள்ள மணல் குவியல் அடுக்குகளையும் இந்த மார்ஸ் ரோவர் 3478-வது செவ்வாய் நாளில் படமெடுத்து அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment