புது தில்லி, மத்திய பொறியியல் - தொழில்நுட்ப கல்வி நிறு வனங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (ஜேஇஇ) முதல்நிலைத் தேர்வில் (மெயின்) 14 மாணவர்கள் அதிபட்ச மதிப்பெண்ணான 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த ஜேஇஇ முதல்நிலை முதல்கட்டத் தேர்வை நாடு முழுவதிலுமி ருந்து 8.7 லட்சம் பேர் பதிவு செய்து, 7.69 லட்சம் பேர் தேர்வெழுதினர் என் பது குறிப்பிடத்தக்கது.
ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி போன்ற உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவ னங்களில் இளநிலை பொறியியல், தொழில்நுட்ப பட்டப் படிப்புகளில் சேர்க்க இந்த ஜேஇஇ தேர்வு முதல்நிலை (மெயின்) மற்றும் முதன்மை (அட்வான்ஸ்டு) என இரு கட்டங்களாக நடத்தப்படும்.
மேலும், முதல்நிலைத் தேர்வில் தகுதிபெறுபவர்களில் முதல் 2.5 லட்சம் பேர் ஜேஇஇ முதன்மைத் தேர்வை எழுதும் தகுதியையும் பெறு வர். இந்த முதன்மைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் மட்டுமே ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும்.
ஜூலை 21 முதல் இரண்டாம் கட்டம்: மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு ஆண்டு இரு முறை நடத்தப்படுகிறது. அந்த வகையில், ஜேஇஇ முதல்நிலை இரண்டாம் கட்டத் தேர்வு வரும் 21-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை நடை பெறஉள்ளது.
இந்த தேர்வு முடிந்த பிறகு, முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட முதல்நிலைத் தேர்வுளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப் படையில் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட என்டிஏ கொள்கையின்படி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
Comments
Post a Comment