தென் கொரியாவில் நடைபெறும் ஐஎஸ் எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் பபுதா திங் கள்கிழமை தங்கப் பதக்கம் வென்றார்.
ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவு இறுதிச்சுற்றில் அவர் 17-9 என்ற புள்ளிகள் கணக் கில் அமெரிக்காவின் லூகாஸ் கொஸினீஸ்கியை வீழ்த்தி முதலிடம் பிடித்தார். லுகாஸ், டோக் கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற வர் என்பது நினைவுகூரத்தக்கது. அவர் இதிலும் 2-ஆம் இடம் பிடிக்க, இஸ்ரேலின் செர்கே ரிக் டர் வெண்கலப் பதக்கம் பெற்றார்.
அர்ஜுன் பபுதா சீனியர் பிரிவில் வென்றுள்ள முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். இதற்கு முன் ஜூனியர் பிரிவில் கடந்த 2016 உலகக் கோப்பை போட்டியில் அவர் தங்கம் வென்றிருந் தார். இப்போட்டியில் அர்ஜுனுடன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியி ருந்த மற்றொரு இந்தியரான பார்த் மகிஜா, 4-ஆம் இடம் பிடித்தார்.
இந்திய ரைஃபிள் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் தாமஸ் ஃபர்னிக் நியமிக்கப்பட்ட பிறகு இந்தியா வென்றுள்ள முதல் தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment