போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோதமான கடத் தலுக்குஎதிரான சர்வதேசநாளை யொட்டி, தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்க லைக்கழகம் சார்பில் மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
இப்போட்டியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச் சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி இணைந்து கொடியசைத் துத் தொடக்கி வைத்தனர்.
இதில் பங்கேற்று ஓடிய அமைச் சர் மா. சுப்பிரமணியன், பெரி யார் மணியம்மை பல்கலைக்சு ழக வளாகத்திலிருந்து தொடங்கி, அன்னை சத்யா விளையாட்டரங் கம் வரை சென்று, மீண்டும் பல்க லைக்கழகம் வரை மொத்தம் 20 கி.மீ. தொலைவுக்கு ஓடினார்.
இந்த மாரத்தான் போட்டியில் ஏறத்தாழ 1350 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட னர். இதில் மூன்று பிரிவுகளில் இந்தியாவின் பல்வேறு பகுதிக
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியில்
குறிப்பாக உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நா டகம் மற்றும் தமிழகத்தின் தஞ் சாவூர், திருச்சி, மதுரை, சேலம், (மதுரை), கடலூர், கரூர், கிருஷ்ணகிரி, தேனி, சென்னை, அரியலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், பெரம்பலூர், மயிலாடுதுறை, ஈரோடு, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் இருந்து ஏராள மானோர் பங்கேற்றனர். றனர்.
இப்போட்டியில், ஆண்கள் பிரிவில் டிவிசிந்த குமார் (உத்தர பிரதேசம்), மணிகண்டன் (தஞ்சா வூர்), ராமேஷ்வர் முஞ்சால் (மகா ராஷ்டிரம்), பிரகதீஸ்வரன் (தஞ் சாவூர்), மணிகண்டா (மைசூர்), வினோத்குமார் (மதுரை), லட்சு மிஷா (மைசூர்), ஹரிகிருஷ்ணா
பங்கேற்று ஓடிய அமைச்சர் மா. சுப்பிரமணியன். (திருவையாறு) ஆகியோர் பரிசு பெற்றனர். பெண்கள் பிரிவில்கே. அர்ச்சனா (மைசூர்), வி. சுவிதா ஏ. கீதாஞ்சலி (திருச்சி), எம். மல்லேஸ்வரி (மைசூர்), ஆர். சுவாதி (திருச்சி), தேஜஸ்வினி (திருச்சி), எஸ். சுகன்யா (தஞ்சா வூர்), டி. லாவண்யா (சேலம்), வி. ரித்திகா (தஞ்சாவூர்), டி. துர்கா (தஞ்சாவூர்) ஆகியோர் பரிசுபெற்
பரிசளிப்பு விழாவில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீல மேகம், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment